புலிகளின் சீருடையுடன் எலும்பு கூடு – கொன்று புதைத்தார்களா ?

கடந்த சில தினங்களுக்கு முன்னர், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் 681 ஆவது படை தலைமையகத்துக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் மலசலகூடம் அமைப்பதற்காக தோன்டிய போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்ற அனுமதியுடன் தோன்டும் நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றது என அதிர்வு இணையம் அறிகிறது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் தடயவியல் பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே 18 உடன் நிறைவுக்கு வந்த யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு, இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் காணாமல் ஆக்கபட்டிருப்பதோடு அவர்களுடைய உறவுகள் இவர்களை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

-athirvu.in

TAGS: