சர்ச்சைக்குரிய இரண்டு ஆளுநர்களில் ஒருவரை பதவியிலிருந்து நீக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாரா கியுள்ளதாக சிங்கள ஊடகமான லக்பிம அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.
இது பெரும்பாலும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவையும் அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடும்போக்குவாத இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் இந்த ஆளுநர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆளுநர்களையும் ஜனாதிபதி பதவி நீக்கினால் அமைச்சர் ரிசாத் பதியுதீனையும் பதவி நீக்குவாரெனத் தெரிவிக்கப்படுகிறது.