பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் வாரங்களில் பதவி விலகுவாரென தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக ரிஷாட் பதியுதீனை சந்தித்து பதவி விலகுமாறு வலியுறுத்துவாரென அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய எதிர்வரும் வாரங்களில் ரிஷாட் பதவி விலகுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றார்.
குறித்த உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளார்.
இவ்வாறு ரிஷாட், ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டம் வலுப்பெற்று வருகின்றது.
ஆகையால் ரிஷாட்டை உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.