சிறிலங்கா அரசாங்கத்துக்கு பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார தேரர் கடும் எச்சரிக்கையுடன் 24 மணிநேர காலக்கெடு ஒன்றை விடுத்துள்ளார்.
அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேற்கு ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்கம் செய்வதற்கே நாளை நண்பகல் 12 மணிவரை இந்த காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதமிருக்கும் அத்துரலிய ரத்ன தேரரைச் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசியபோதே தேரர் மேற்கண்டவாறு கூறினார்.
இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்குள் மேற்படி நபர்கள் பதவி நீக்கம் செய்யப்படவில்லையெனில் அனைத்து பிக்குமாரும் களத்தில் இறங்குவார்கள் என கடும் எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.
-athirvu.in