தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் தலைமை அலுவலகத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டம் தமிழரசுக் கட்சி அரசியலிலி ருந்து ஒதுங்குமாறு கோரிய பதாதைகளை தாங்கியவாறு இடம்பெற்றது.
போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.மேலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினரும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சாட்டினர்.இலங்கை அரசின் சுக போக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோடி ரூபாய் பணத்துக்கு விலை போய்விட்டனர்.இவர்கள் மக்கள் நலனில் எவ்வித அக்கறையும் காடடவில்லை.எனவே இவர்கள் பதவிகளை துறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
-athirvu.in