லத்திபா கோயா, எம்ஏசிசி தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டதைப் பலர் குறை சொன்னாலும் அவரைப் பொறுத்தவரை மலேசியாவை ஊழலற்ற நாடாக மாற்றுவதில் உறுதியாக இருக்கிறார்.
“ஹரி ராயாவுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட என் நியமனம் குறித்து பலர் குறை கூறியுள்ளனர். கேள்வி கேட்கவும், குறை சொல்லவும் கருத்துக் கூறவும் எல்லாருக்கும் உரிமை உண்டு.
“என் வேலை, தெளிவானதே – ஊழல் எங்கிருந்தாலும் அதை ஒழிப்பதுதான் (அது). மக்கள் மற்றும் எம்ஏசிசி அதிகாரிகளின் ஊக்கத்துடனும் ஒத்துழைப்புடனும் மலேசியாவை ஊழலற்ற நாடாக மாற்றுவோம்”, என லத்திபா இன்று வேலைக்குச் சென்ற முதல் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.