இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அக்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கையுடனான ஆதரவை தொடர்ந்தும் வெளிப்படுத்தும் முகமாக பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இரா.சம்பந்தன், நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது தடவையாக வெற்றிபெற்று அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இந்த சந்திப்பில் புதிய அரசியலமைப்பை உள்ளடக்கிய பல்வேறு முக்கிய பிரச்சினைகள் 13 வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு இந்த விடயங்கள் குறித்து புது டெல்லியில் ஒரு விரிவான கூட்டம் நடத்தவும் மோடி ஒப்புக்கொண்டதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
-eelamnews.co.uk