தீவிரவாதத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கு இந்தியா- சிறிலங்கா இணக்கம்

தீவிரவாதத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான பேச்சுக்களின் போது, இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ கீச்சகப் பக்கத்தில் இதுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய சந்திப்புக்குப் பின்னர், வெளியிடப்பட்டுள்ள அந்தப் பதிவில்,

“சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, சந்தித்தேன். பத்து நாட்களில் எமது இரண்டாவது சந்திப்பு இது.

தீவிரவாதம் ஒரு கூட்டு அச்சுறுத்தல். அதனை கூட்டாக, மையப்படுத்திய நடவடிக்கையின் மூலம் எதிர்கொள்ள வேண்டும் என சிறிலங்கா அதிபரும் நானும் இணங்கியுள்ளோம்.

பகிர்வான, பாதுகாப்பான எதிர்காலத்துக்காக சிறிலங்காவுடன்,பங்காளராக இணைந்து நிற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீள வலியுறுத்துகிறேன்” என இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: