மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை உடைத்து மீன் சந்தை கட்டிய குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டினை நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பதிவு செய்துள்ளார். நேற்றைய தினம் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு சென்ற அவர் குறித்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.
இன்று நான் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளேன் என அவர் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-eelamnews.co.uk