‘வான் அசிசா பதவி விலகி துணைப் பிரதமர் பதவியை அன்வாருக்கு விட்டு கொடுக்க வேண்டும்’

துணைப் பிரதமராக உள்ள டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அவரது பதவியை அவரின் கணவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைத்து விட்டு பதவி விலக வேண்டும் என்கிறார் சிலாங்கூர் பெர்சத்து பொருளாளர் முகம்மட் ஷயிட் ரோஸ்லி.

ஜெராம் சட்டமன்ற உறுப்பினருமான முகம்மட் ஷயிட், அது டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்கும் திட்டம் சீராக நடப்பதற்கு வழிகோலும் என்றார்.

“வான் அசிசா முதலில் பதவி விலக வேண்டும். அப்போதுதான் புதிதாக துணைப் பிரதமர் பதவியை ஏற்பவர் பிரதமர் பதவியை ஏற்பதற்கு வசதியாக இருக்கும்”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.