ஆட்கள் காணாமற்போதல் சம்பவங்கள்; இலங்கைக்கு 2-ம் இடம்!

ஆட்கள் காணாமற் போதற் சம்பவங்கள் அதிகளவில் தீர்க்கப்படாத நாடுகளின் வரிசையில் இலங்கை 2-ம் இடத்தை வகிக்கிறது என்று அனைத்துலக மன்னிப்பு சபையின் இலங்கைக்கான நிபுணர் யோலண்டா பொஸ்டர் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான காணாமற் போதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை எனவும் இதனால் பல குடும்பங்கள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளுடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் தமிழர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் குற்றச் செயல்களிற்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற அனைத்துலக நியதிக்கு மதிப்பளிக்க வேண்டுமாயின் சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும். இலங்கை விவகாரங்களை ஏனைய நாடுகள் பிழையான முன்னுதாரணமாகக் கொள்ளாமல் இருப்பதற்காக விசாரணை நடாத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சகல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் விசாரணை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் யோலண்டா பொஸ்டர் தெரிவித்துள்ளார்.

TAGS: