சஹ்ரானின் முதல் திட்டமிட்ட தாக்குதல்; சிக்கிய மற்றுமோர் ஆதாரம்!

ஸ்ரீலங்காவில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தொடர் தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் திட்டமிட்ட முதல் தாக்குதலான மட்டக்களப்பு வவுணதீவில் பொலிசார் மீதான இரட்டைக் கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக கூறப்டும் இரண்டு உந்துருளிகளை காத்தான்குடி மற்றும் ரிதிதென்னை பிரதேசங்களில் இருந்து இன்று காலை சி.ஐ.டி.யினர் மீட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த இரு உந்துருளிகளும் குறித்த தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சவுதி அரோபியாவில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த முகமது ஆப்தீன் மில்ஹான், மற்றும் சஹ்ரானின் சாரதியான கபூர் ஆகிய இருவரும் பயன்படுத்தியவை என தெரியவந்துள்ளதோடு ஒரு உந்துருளி காத்தான்குடியிலுள்ள மில்ஹானின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

மேலும் பொலனறுவை மட்டக்களப்பு எல்லைப் பிரதேசமான ரிதிதென்னை பகுதியில் சஹ்ரானின் சாரதியான கபூரின் நண்பனின் வீட்டில் வைத்து ஸ்கூட்டி ரக‍ மற்றுமொரு உந்துருளியையும் பொலிஸார் மீட்டுள்ளதாக தெரி வித்துள்ளனர்.

மில்ஹான் மற்றும் கபூர் ஆகிய இருவரும் கடந்த வருடம் நவம்பர் 29 ஆம் திகதி வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த இரு கைத்துப்பாக்கியை எடுத்துச் சென்றிருந் தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுணதீவு தாக்குதல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் டுபாயிலிருந்து அழைத்துவரப்பட்ட சந்தேக நபர்களிடம் குற்றத்தடுப்பு பிரிவினர் தொடர் விசாரணைகளை மேற் கொண்டு வருவதும் குறிப்பிடத் தக்கது.

-athirvu.in

TAGS: