முஸ்லிம் வர்த்தக நிலையங்களைப் புறக்கணிக்க வேண்டும்: அஸ்கிரிய மகாநாயக்க தேரர்

முஸ்லிம் வர்த்தக நிலையங்களை சிங்கள மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரான வரக்காகொட தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டி யட்டிநுவர ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முஸ்லிம்கள் சிங்கள மக்களை அழிக்க முன்னெடுத்த செயற்பாடுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. எமது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வைத்தியர் ஒருவர், எமது இலட்சக்கணக்கான குழந்தைகளை இல்லாமற்செய்துள்ளார். இப்படியான சிங்கள இனத்தை அழிக்க நினைக்கும் தேசத்துரோகிகளை கல்லால் எறிந்து சாகடிக்க வேண்டும் என்று பலர் என்னிடம் கூறினார். அப்படி செய்யுங்கள் என்று நான் கூற மாட்டேன். ஆனால், செய்யப்பட வேண்டியது அதுதான். நாட்டையும் மக்களையும் நேசிக்கும் தலைவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: