கல்முனையில் வடக்கு பிரதேச செயலகத்தைத்தரமுயர்த்தக் கோரி நடைபெற்றுவரும் உண்ணாவிரதப்போராட்டம் இன்று வெள்ளிக் கிழமை ஐந்தாவது நாளாகத் தொடர்கின்றது.
கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கல்முனை முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தசிவக்குருக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் அ.விஜயரெத்தினம் அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவரும் தொழிலதிபருமான கே.லிங்கேஸ்வரனும் ஆகியோர் உண்ணாவிரதத்தில் உள்ளனர்.
உண்ணாவிரதிகளின் உடல்நிலை மிக மோசமாகிவருகிறது. மருத்துவர்கள் இடையிடையே வந்து பரிசோதனை செய்கின்றனர். உண்ணாவிரதிகள் வைத்தியசாலைக்குச்செல்ல மறுக்கின்றனர். படுத்தபடுக்கையில் கிடக்கிறார்கள்.
மதகுருக்களான கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கல்முனை முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தசிவக்குருக்கள் ஆகியோர் கூட்டாகத் தெரிவிக்கையில் இப்போராட்டம் வெற்றியளிக்காவிடில் நாம் இருவரும் கட்டித்தழுவியவாறு தீக்குளிப்போம் என்று கூறினர்.
இதேவேளை ஜம்பது மகளிர் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்துள்ளனர்.
வழமைக்குமாறாக மக்கள் ஒன்றுகூடியுள்ளது. அதனைக்கட்டுப்படுத்த போக்குவரத்துப் பொலிசார் தொடர்ந்து கடமையில் உள்ளனர்.
கல்முனைப்பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.சூரியபண்டார சிரேஸ்;பொலிஸ்அத்தியட்சகர் ஆகியோர் நேரடியாக வந்து ஏற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடினர்.
இதேவேளை கல்முனை மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இரண்டு சமூகத்தாருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் நேற்று மாலை (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ரத்ன தேரர்,
நான் அனைத்து நியாயங்களையும் முஸ்லிம் தரப்பினரிடம் எடுத்துக் கூறியுள்ளேன். இது தமிழர்களின் பிரதேச செயலகம் இல்லை இது இந்த நாட்டு அரசினுடைய பிரதேச செயலகம் எனவே இதற்கு எவரும் உரிமைகோர முடியாது. மீண்டும் எல்லை நிர்ணயம் செய்து அதன் அறிக்கையை எதிர்பார்ந்து நாங்கள் இந்த பிரச்சினையை தாமதிக்க முடியாது. எனவே இதற்கான முடிவினை நாங்கள் விரைவாக எடுக்கவேண்டும். உண்ணாவிரதம் இருப்போரின் உடல் நிலையானது பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எது எவ்வாறாக இருந்தாலும் இது விடயத்தில் நல்லதொரு தீர்வினை உங்களுக்கு நான் பெற்றுத்தருவேன் என்றார்.
-athirvu.in