தமிழீழம் தான் தீர்வு என்று சொல்கிறாரா சம்பந்தன்?

அதியுச்ச அதிகாரத்தை தமிழர்களுக்கு வழங்கினால் மாத்திரமே இலங்கை நாடு இரண்டாக பிளவுபடும் அபாயத்திலிருந்து தப்பிக் கொள்ளலாம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு 2015 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியை நிறைவுக்கு கொண்டு வந்ததுடன் மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய அரசாங்கத்தை ஆட்சியில் ஏற்றுவதற்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவினை வழங்கியது.

இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு அரசியல் தீர்வு வரும் என்று சம்பந்தர் கூறினார். பின்னர் 2017ஆம் ஆண்டிற்குள் தீர்வு வரும் என்று இரா சம்பந்தன் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு தை பொங்கல் தீர்ப்பு வரும் என்று கூறிவிட்டு, பின்னர் மீண்டும் 2018 தீபாவளிக்கு ஒரு தீர்வு பெறும் என்று கூறி தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டனர்.

காலம் காலமாக சிங்கள அரசுகள் ஈழத் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றன. உண்மையில் இம்முறை சிங்கள அரசோடு இணைந்து எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையும் எம்மை ஏமாற்றியிருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மையாகும். அத்துடன் சிங்கள அரசின் இந்த அரசியல் நாடகத்திற்கும் ஒரு குற்றங்களிலிருந்து இனப்படுகொலையில் இருந்து தப்பிக் கொள்ளும் தந்திரத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலியாகியுள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை வைக்க முன்வைக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் கூறியது. இலங்கை அரசின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சர்வதேசத்திற்கு இந்த வாக்குறுதி அளித்தும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்ப முயன்றனர்.

கூட்டமைப்பு க்கான பட முடிவு

இந்த நிலையில் இன்று நிகழ்வொன்றில் பேசிய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன 18வது அரசியல் சீர்திருத்தத்தையும் 19ஆவது அரசியல் தீர்வு சீர்திருத்தத்தையும் அகற்றிவிட்டால் நாட்டில் பிரச்சினை ஏற்படாது என்று கூறியுள்ளார். 18ஆவது திருத்தத்தின் மூலம் மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய சர்வாதிகார ஆட்சியை பலப்படுத்தினார். அத்துடன் 19 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக கொண்டு புதிய ஆட்சி ஒன்றை அமைக்க முற்பட்ட போது தனக்கு அதிகாரம் இல்லாமையினால் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்தார். நீதிமன்ற வழக்கு வரையில் சென்று மைத்திரிபால சிறிசேன கடும் பின்னடைவை அடைந்ததுடன் அவரது ஆட்சியும் கலைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் க்கான பட முடிவு

இந்த நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லை. மஹிந்த ராஜபக்ஷவை விடவும் தன்னை ஒரு சர்வாதிகாரியாக ஆக்கிக் கொண்டு, இலங்கை அரசியலமைப்பை அதற்கு பலமாகவும் துணையாகவும் மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவதான தமிழர்களுக்கான அரசியல் தீர்வு காணும் முயற்சிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அல்லது கைவிடப்பட்டுள்ளன.

இப்படி ஒரு சூழ்நிலை தான் ஏற்படும் என்றும் இலங்கை அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவினை வழங்க கூடாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான எதிரான விமர்சனங்களை முன்வைக்கின்ற தமிழ் அரசியல் தலைவர்கள் கூறியிருந்தனர். முற்கூட்டியே எச்சரித்திருந்தனர்.

ஆனால் அந்த விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் புறந்தள்ளி இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வை முன்வைக்கும் என்று கூறிய சம்பந்தன் இப்போது மீண்டும் புலம்பத் துவங்கியுள்ளார். அந்த அடிப்படையில்தான் இரா சம்பந்தன் அவர்கள் அதியுச்ச அதிகாரத்தை தமிழர்களுக்கு வழங்காவிட்டால் நாடு இரண்டாக பிளவுபடும் என்றும் அதிஉச்ச அதிகாரத்தை தமிழர்களுக்கு வழங்கி விட்டால் நாம் நாடு பிளவு அடைய தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

மைத்திரி சம்பந்தன் க்கான பட முடிவு

உண்மையில் இலங்கை அரசாங்கம் தீர்வு ஒன்றை முன்வைக்காது. இப்போது சம்பந்தர் கூறிய இந்த கருத்து விடுதலைப்புலிகளின் கூறிய தீர்க்க தரிசனத்தையே எடுத்துரைக்கின்றது. அதாவது சிங்கள அரசு ஒருபோதும் தமிழர்களுக்கு தீர்வினை முன் வைக்க முன்வைக்காது. தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜையாக அழித்தொழித்து அவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் தீர்வினையே சிங்கள முன்வைக்கும் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கருத்தை இரா சம்பந்தன் உறுதிப்படுத்தியுள்ளார், அல்லது ஏற்றுக்கொண்டுள்ளார்.

அப்படியாயின் தமிழீழம்தான் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று சம்பந்தர் கூறுகிறாரா? சம்பந்தர் அவ்வாறு கூறினாலும் கூறாவிட்டாலும் சிங்கள அரசுடனான அரசியல் யுத்தத்திற்கு, சிங்கள அரசின் இனப் படுகொலைக்கு, சிங்கள அரசின் ஒடுக்குமுறைகளுக்கு, தமிழ் ஈழம்தான் தீர்வ.

-eelamnews.co.uk

TAGS: