கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு – அமைச்சரவை முடிவு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினைகளை ஒரு மாத காலத்துக்குள் தீர்த்து வைக்க சிறிலங்கா அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.

1989ஆம் ஆண்டில் இருந்து நீடித்து வருகின்ற ஒரு நீண்ட காலப் பிரச்சினையாக இது இருந்து வருகிறது என, அமைச்சரவைக் கூட்டத்தில், உள்நாட்டு மற்றும் உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

இதையடுத்து, உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சினையை ஒரு மாதத்துக்குள் தீர்ப்பதென அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

-puthinappalakai.net

TAGS: