கலஹா பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு!

கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புபுரெஸ்ஸ வீதியின் வெதஹெக்க காட்டுப்பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (30) இரவு கம்பளை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் கலஹா பொலிஸ் அதிகாரிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது 2800 கிராம் வெடி மருந்து, 1700 கிராம் அமேனியா, 4 நீல வர்ண ஜெலனய்ட் குச்சிகள், வெற்று ஜெலனய்ட் குச்சிகள் 3 மற்றும் சாதாரண நூல் 14.5 மீட்டர் கண்டுபிடிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-eelamnews.co.uk

TAGS: