புலிகளை அழிக்க உதவிய இந்தியா தமிழர் பிரச்சினைக்கு உதவவேண்டும்!

”தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியா, அமெரிக்கா உட்படச் சர்வதேச நாடுகள் பலவும் இலங்கைக்கு உதவி வழங்கின. புலிகளை அழித்த பின் இனப் பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்திக்கொடுப்போம் என்று சர்வதேசத்துக்கு இலங்கை அரசு வாக்குறுதி வழங்கியது. ஆயினும் போர் முடிந்து பத்து வருடங்கள் கடந்தும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டவில்லை . இந்த விடயத்தில் இந்தியா உட்படச் சர்வ தேசம் பார்வையாளர்களாகவே இருந்து வருகின்றது. இனியும் அந்த நிலைமை தொடரக்கூடாது. இதுகுறித்து அவர்கள் தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவேண்டும். அந்தக் கடமை அவர்களுக்கு உண்டு.”

– இவ்வாறு நேற்று இந்தியத் துணைத் தூதுவர் முன்னிலையில் மிகக் காட்டமா கக்கருத்து வெளியிட்டார் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

தந்தை செல்வநாயகம் அறக் கட்டளையால் யாழ். மத்திய கல் லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட தந்தை செல்வா கலையரங்கு நேற்றுத் திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இரா.சம்பந்தன் பிரதம விருந்தின் ராகப் பங்கேற்று கலையரங்கைத் திறந்துவைத்தார். யாழ்ப்பாணத் தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவரும் இந்த நிகழ்வில் பங் கேற்றார். இங்கு உரையாற்றும் போதே சம்பந்தன் மேற்கண்ட வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் –

தந்தை செல்வாதன்வாழ்க்கை முழுவதிலும் தமிழ் பேசும் மக்களின் தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்காகச் செயற்பட்டிருந் தார். அதனைவிட அவர் வேறு எதிலும் ஈடுபட்டவரல்லர்.. தந்தை செல்வா அரசியலுக்கு வந்தபோது இந்த நாடு சுதந்திரம் அடைந்து அமைதியான நாடாகப் பல்வேறு முன்னேற்றங்கள் அடையவேண்டிய ஒரு நாடாகக் கருதப்பட்டு அந்தப் பாணியில் அந்த நாடு முன்னேறுமென்று ஒருபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், அதே சமயம் நாட்டி னுடைய தேசிய பிரச்சினை, காணிவிடயம், மீள்குடியேற்றம், பொருளாதார விடயம் உள்ளிட்ட பிறவிடயங்கள் தலை தூக்கின. அவ்வாறான நிலைமை உருவாகின்றபோது தந்தை செல்வா ஒருகடினமான போக்கைக் கடைப் பிடிக்கவில்லை . அப்போது கூடப் பல இனங்களை, பல மதங்களை, பல மொழிகளைப் பேசுகின்ற, பலகலாசாரங்களைப் பின்பற்றுகின்ற பல இன மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் ஆட்சிமுறை மத்தியில் மாத்திரம் இருக்கமுடியாது என்று அவர் கூறியிருந்தார்.

அவ்வாறு அதிகாரங்கள் பகிர்ந்து பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்டு, அந்தந்தப் பிராந்தியங்களில் வாழ்கின்ற மக்கள் தங்களுடைய உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி தங்கள் கருமங்களைக் கையாளக் கூடிய நிலைமை ஏற்பட வேண்டும். அவ்விதமான ஒரு நிலைமை ஏற்பட்டால்தான் நாட்டில் சமாதானம், சமத்துவம் உருவாகும் என்ற கருத்தை முன்வைத்தார்.

உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு கண்டங்களில் குறிப் பாக அமெரிக்காவில், கனடாவில், ஆஸ்திரேலியாவில், ஐரோப்பா வில், ஆசியாவில் எனப் பல்வேறு நாடுகளிலும் அவ்விதமான ஆட்சிமுறை இருக்கிறது. அவ்விதமான ஆட்சிமுறை இருக்கின்ற காரணத்தினால் அந்த நாடுகளில் சமாதானம் நிலவுகின்றது. மக்கள் சமத்துவமாக நடத்தப்படுகின்றார்கள். மக்கள் சமாதான மாக வாழ்கின்றார்கள். தங்கள் தங்களுடைய கருமங்களை அந்த மக்கள் தாங்களே வழிநடத் தக்கூடிய – அமுல்படுத்தக்கூடிய ஒரு நிலைமை இருக்கிறது.

அதனைப்போன்ற நிலைமை ஏற்படவேண்டுமென்ற தந்தை செல்வாவின் இந்தக் கருத்து துர திஸ்டவசமாக இங்கு ஏற்றுக்கொள் ளப்படவில்லை . இருந்தபோதிலும் கூட தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். தமிழ் மக் களைப்பொறுத்தவரையில் தமிழ் மக்கள் முழுமையாக அவரை ஆதரித்தார்கள். அதனூடாகத் தந்தை செல்வா தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அவர் இறந்த பிறகும் தொடர்ந்தும் தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவராக இருக்கின்றார். அவருடைய நிலைப்பாட்டை விட எமக்கு வேறு நிலைப்பாடுகள் இல்லை . அவருடைய அந்த நிலைப்பாடுதான் எமது நிலைப் பாடும். அவருடைய கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் அல்லது அமுல்படுத்தப்படாவிட் டாலும் கூட அவருடைய இறப் புக்கு பின்னர் பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சி அதே கொள்கையின் அடிப்படையில் அதே அரசியல் பாதை யில் தொடர்ந்தும் பயணிக்கிறது.

தந்தை செல்வாவின் கொள்கையின் அடிப்படையில் இந்த நாட்டில் ஒரு பிரிவினை ஏற்படா மல் ஒரு சமாதானமான – நிரந்தர மான தீர்வு ஏற்படலாமென்பதே எங்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. அது ஏற்பட வேண்டுமென்று நாங்கள் முயற்சிக்கின்றோம். அது ஏற்படக்கூடிய வகையிலே நாங்கள் செயற்படுகின்றோம். அவ்விதமான அங்கீகாரத்தை ஜனநாயக ரீதியாக நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் எமது மக்கள் வழங்கியிருக்கின்றார் கள். ஆனபடியால் எமது பயணம் தொடருகின்றது.

இன்றைக்கு இந்த நாடு மிகவும் மோசமான நிலையில் இருக் கின்றது. அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதி லிருந்த நாட்டை மீட்கலாமோ இல்லையோ என்ற நிலைமை உள்ளது. இதில் தமிழ்த்தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டு மென்பது முக்கியமான விடயமாக உள்ளது. தமிழ்த் தேசியப் பிரச் சினை தீர்க்கப்படவேண்டுமென் பதை இன்று சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அதற்கமைய பல கருமங் கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் ஒன்றும் பூர்த்தியடைய வில்லை. அவ்வாறு பூர்த்தியடை யாமல் இருக்கமுடியாது. நாடாளு மன்றத்தில் பலவிடயங்கள் நடை பெற்றன. பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல முயற்சி கள் எடுக்கப்பட்டன. பல அறிக்கை கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் ஒரு நிரந்தரமான நியாயமான அரசியல் தீர்வை உள்ளடக்கி ஒரு முடிவு இன்னமும் வரவில்லை .

இவ்வாறு இருந்தாலும் அந்தப் பாதையில் நாங்கள் தொடருகின் றோம். அந்தப் பாதையில் தான் தந்தை செல்வா பயணித்தார். 72 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஓர் அரசியல் சாசனம் உருவாக் கப்பட்டபோது தந்தை செல்வநாய கம் முன் கூறியதன் பிரகாரம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அந்தச் சாசனத்தின் பின்னர் 78 ஆம் ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாவிட்டால்வெளி யக சுயநிர்ணய உரிமை பெற எமக்கு முழுமையான உரித்து உண்டு என்று குறிப்பிடப்பட்டது.

அதற்குப்பிறகு எமது மக்கள் அந்தத் தீர்மானத்தை முழுமை யாக ஏற்றுக் கொண்டபோதிலும் கூட சமாதானமாக இந்தப் பிரச் சினையைத் தீர்த்து ஒருமித்த நாட்டுக்குள் அதாவது தந்தை செல்வாவின் ஆரம்பக்கொள்கை யின் அடிப்படையில் நாங்கள் செயற்படவேண்டுமென்ற முடிவு எமது மக்களால் எடுக்கப்பட்டு ஜனநாயக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால் இன்று நாங்கள் எங்கு நிற்கின்றோம். அந்தப் பாதையில் நாங்கள் செல்கின் றோம். அந்தப்பாதையில் இருந்து விலகாமல் பயணிக்கின்றோம். உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாக வும் அந்த இலக்கை அடைய நாங்கள் முயற்சிக்கின்றோம். ஆனால் பிரச்சினைகள் தீர்க்கப்பட

வில்லை. தந்தை செல்வாவின் காலத்தில் தீர்க்கப்படாத பிரச் சினை இனிமேலும் தீர்க்கப்படா மல் இருக்கலாமா?

ஏறத்தாழ முப்பது வருடகால மாக இராஜதந்திர ரீதியாக, ஒத் துழைப்பின் மூலமாக, ஒப்பந்தங் களின் மூலமாக – பேச்சுக்களின் மூலமாக அவர் முயற்சித்தார். அது நிறைவுபெறவில்லை . நாட் டில் இன அழிவு ஏற்பட்டிருக்கின் றது. எமது மக்களில் ஐம்பது வீத மான மக்கள் இலங்கைத் தீவில் வாழ வேண்டியவர்கள் உலகத் தில் வேவ்வேறு நாடுகளில் வாழ் கின்றார்கள்.

ஆயுதப்போராட்டம் ஆரம்பிப் பதற்கு முன்பதாகபிரச்சினைகளை தீர்ப்பதற்கு எங்களால் இயன்ற முயற்சிகளை நாங்கள் எடுத் தோம். ஆனால் அது கைகூட வில்லை . ஆயுதப் போராட்டம் நடைபெறுவதற்கு முக்கியமான காரணம் தேசியப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்ததே தான். அத்தோடு தமிழ் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட் டதும்தான். இவைதான் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்க முக்கிய மான காரணமாக அமைந்தன.

இன்று ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. அந்த முடிவை ஏற்படுத்துவதற் குச் சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு போதிய ஆதரவை வழங்கியது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா உட்பட எல்லா நாடு களும் இலங்கைக்கு உதவி வழங் கின. அதன் மூலமாக தமிழீழ விடுதலைப்புலிகளை – ஆயுத மேந்திப் போராடிய இளைஞர் களை இல்லாமல் செய்யும் நிலை உருவாகியது.

ஆனால் அப்பொழுது இலங்கை அரசுக்கு இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்திக்கொடுப்போம் என்று சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி யைக் கொடுத்தது. அவ்வாறு சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசால் கொடுக்கப்பட்ட வாக் குறுதி இன்னமும் நிறைவேற்றப் படவில்லை .

ஆக யுத்தம் முடிவடைந்து ஏறத்தாழ பத்து வருடங்கள் ஆகி விட்டன. சர்வதேச சமூகம் தொடர்ந் தும்பார்வையாளர்களாக இருக்கப் போகின்றதா? சர்வதேச சமூகம் தொடர்ந்தும் பார்வையாளர்களாக இருக்கலாமா? சர்வதேச சமூகத் துக்கு ஒரு கடமை இருக்குதல் லவா? இந்தியாவுக்கு ஒரு கடமை இல்லையா? ஏனைய நாடுகளுக்கு ஒரு கடமை இல்லையா?

தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கு உலகத்தில் பல்வேறு நாடுகளில் இடம்பெற்று வருகின்ற ஆட்சி முறையின் அடிப்படையில் ஒரு நியாயமான – நிரந்தரமான தீர் வைக்காணஒருவழியை ஏற்படுத் துவதற்குச் சர்வதேச சமூகத்துக்கு ஒருகடமையில்லையா? இதுதான் தற்போதுள்ள கேள்விகள். ஆகவே அது நடைபெறாவிட்டால் இந்த நாட்டுக்குள் தீர்க்க முடியாத பிரச் சினை வேறு எங்காவது தீர்க்கப் படவேண்டி வரும்.

ஆனபடியால் முக்கியமான கால கட்டத்தில் நாங்கள் இருக் கின்றோம். எம்மைப் பொறுத்த வரை எமது மக்களின் பரிபூரண மான ஆதரவுடன் தந்தை செல் வாவின் பாதையில் பயணிக்கின் றோம். அந்தப் பயணம் நல்ல முடிவை ஏற்படுத்துமென்ற நம் பிக்கை எமக்கு உண்டு. அதனை எமது மக்களும் ஏற்றுக்கொள் வார்கள்.

தந்தை செல்வா உயிரோடு இருந்திருந்தால் எதைச் செய் வாரோ அல்லது எதைச் செய்ய நினைப்பாரோ அதைத் தான் நாங்களும் செய்கின்றோம். தொடர்ந்தும் அதையே செய் வோம் – என்றார்.

-tamilcnn.lk

TAGS: