தமிழர்களின் மற்றுமொரு எழுச்சி; திணறும் பிக்குகள்!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடியில் மீளவும் ஈழத்தமிழர்கள் தமது வரலாற்றை இன்றையதினம் நிலைநாட்டியுள்ளனர்.

வரலாற்று ரீதியாக தமிழர்களின் பூர்வீக மண்ணை ஆக்கிரமித்து பௌத்தகோவிலை கட்டி தமிழருக்கு அங்கே உரிமையில்லை என அடாத்தாக தெரிவித்த பிக்குகளுக்கு அது எமது மண்தான் என இன்றையதினம் நிரூபித்துள்ளனர் தமிழர்கள்.

அந்தவகையில் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வருவதோடு ஆரம்பமாகியது

இன்று அதிகாலை 3 மணி அளவில் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் மடை பரவி பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கே வருடாந்த பொங்கல் ஆரம்பாமாகியது.

அத்துடன் விசேட பூசை வழிபாடுகளும் அங்கு சிறப்புற இடம்பெற்றன.இதன்போது பொங்கல் பொங்கியவர்கள் மடை பரப்பி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.தொடர்ந்து ஆலயத்துக்கு வந்தவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த வரலாற்று பொங்கலில் வடக்கிலிருந்து பெருமளவு மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: