‘அரசாங்கம் பயங்கரவாத நடவடிக்கைகளை மறைக்க முயற்சி’

அரசாங்கம் இனவாதம் என்ற போர்வையில், பயங்கரவாத நடவடிக்கைகளை மறைக்க முயற்சிப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

சஹ்ரானுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து, அவர்களை சிறையில் அடைக்காமல், அவர்களுக்கு 3 மாதங்கள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் எனத்  தேரர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் தொடர்பில் அரசாங்கத்துக்கு எவ்வித அக்கறையும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், இனவாதம் தூண்டப்படுவதால், பயங்கரவாத நடவடிக்கைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக வைத்தியர் ஷாபி தொடர்பான குற்றச்சாட்டை குற்ற விசாரணைப் பிரிவினர் மறைப்பதற்கு பாரிய முயற்சிகளை முன்னெடுக்கின்றனர்.

இது தொடர்பில், பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளதாகவும், இது குறித்து ஆராய்ந்து விசாரணை செய்ய வேண்டியது அவரது கடமை என்றும் ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

-http://tamilmirror.lk

TAGS: