நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் சந்திரிகா அரசு நடத்திய குண்டுத்தாக்குதலை நேற்று நாடாளுமன் றத்தில் நினைவு கூர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இழப்புக்களையும் உயிரிழப்புக்களையும் தமிழினம் என்றுமே மறக்காது என்றும் கூறினார்.
நெடுஞ்சாலைகள் அமைச்சின் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
1995 ஆம் ஆண்டு நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் சந்திரிகா அரசு நடத்திய வான் தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்ட நினைவு தினம் இன்றாகும் (நேற்று). அதே நவாலிப் படு கொலைகள் போல சின்னக்கதிர் காமத்திலும் மக்கள் படுகொலை செய்யப்பட்ட தினம்.
நவாலிப் படுகொலையில் உடல் சிதறித்துடிக்கப்படுகொலை செய்யப்பட்டமை, அங்கு இரத்த ஆறுஓடியமை ஐ.நாவிலும் உலக அளவிலும் பதியப்பட்டுள்ளது. அந்தத் துன்பத்தை இன்று நான் சபையில் நினைவு கூருகிறேன். அப்படியான பல இழப்புக்களை குறிப்பாக உயிரிழப்புக்களைத் தமிழினம் ஒருபோதும் மறக்காது.
அப்படியான இனப்படு கொலைகளுக்கு இன்றுவரை நீதியில்லை. எல்லோரும் அதை மறந்து செயற்பட்டுக்கொண்டிருக் கிறீர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் – என்றார்.
-tamilcnn.lk