அரசாங்கத்துக்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களிப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: இரா.சம்பந்தன்

“தற்போதைய அரசாங்கத்துக்கு நாங்கள் ஆதரவளிப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. திருகோணமலையிலுள்ள எனது வீட்டின் முன்னால் இன்றும் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனாலும், இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு நாங்கள் என்ன செய்யப் போகிறோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு சற்றுநேரத்தில் (இன்று வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“கடந்த அரசாங்கத்தைவிட இந்த அரசாங்கம் சில விடயங்களில் முன்னேற்றகரமானது. மனித உரிமைகள் விடயத்திலும் இந்த அரசாங்கம் ஓரளவுக்கு முன்னேற்றகரமானதாக செயற்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில், இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு என்ன செய்யப் போகிறோம். ஆகவே, நாங்கள் கவனமாகச் செயற்பட வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-http://4tamilmedia.com

TAGS: