தீவிரவாத முறியடிப்பு – சிறிலங்காவுக்கு தொழில்நுட்ப உதவிகளை அளிக்க உறுதி

சிறிலங்காவின் பாதுகாப்பை வலுப்படுத்த தொழில்நுட்ப உதவிகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் என்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத முறியடிப்பு இணைப்பாளர் கில்லீஸ் கெர்சோவ் உறுதியளித்துள்ளார்.

சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை நேற்று முன்தினம் சந்தித்த போதே, கில்லீஸ் கெர்சோவ் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

தீவிரவாத முறியடிப்புக்குத் தேவையான நிபுணத்துவத்தை சிறிலங்கா அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்வதற்கும்,  ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தீவிரவாத தாக்குதல்களுக்குப் பின்னர், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, அரசாங்கத்துக்கு கூட்டு எதிரணி முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக இந்தச் சந்திப்பின் போது, மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கு ஜூலை 11 தொடக்கம் 16 வரையான காலத்தில் கில்லீஸ் கெர்சோவ் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-puthinappalakai.net

TAGS: