அரண்மனை அறிவிக்காமல் யாரையும் பெர்மைசூரி கிளந்தான் என்று குறிப்பிடக் கூடாது

கிளந்தான் அரண்மனை அது அறிவிக்காமல் தனிப்பட்ட எவரையும் பெர்மைசூரி  கிளந்தான் என்றோ, ராஜா பெரம்புவான் கிளந்தான் என்றோ சுல்தானா கிளந்தான் என்றோ கிளந்தான் இராணியார் என்றோ குறிப்பிடக் கூடாது என்று அறிவித்துள்ளது.

இவ்விசயத்தில் கிளந்தான் அரண்மனையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே சரியானதாகக் கருதப்பட வேண்டும் என்று அரண்மனை விவகாரப் பொறுப்பதிகாரி நிக் முகம்மட் ஷப்ரிமான் நிக் ஹசான் ஓர் அறிக்கையில் கூறினார்.

“மேன்மை தங்கிய டாக்டர் தெங்கு முகம்மட் ஃபா-இஸ் பெட்ரா இப்னி சுல்தான் இஸ்மாயில் பெட்ரா கிளந்தானின் தெங்கு மக்கோடா, ஐந்தாம் சுல்தான் முகம்மட்டின் தாயார் தெங்கு அனிஸ் பிந்தி அல்மர்ஹும் தெங்கு அப்துல் ஹமிட் கிளந்தானின் ராஜா பெரம்புவான்”, என்றாரவர்.

சமூக ஊடகங்களில் வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி விட வேண்டாம் என்றவர் வலியுறுத்தினார்.