அகத்தியர் அடிகளார் முகத்தில் சுடுநீர் ஊற்றிய சிங்களவர்கள்; தமிழர் தலைநகரில் பெரும் பதற்றம்!

திருகோணமலை – கன்னியா பிரதேசத்தில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெறவிருந்த நிலையில் தற்போது பதற்றமான சூழல் நிலவிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

இந்த நிலையில் திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி, கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் அதிகளவிலான மக்கள் கூடி இருகின்றனர். எனினும் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதுடன், கன்னியா வெந்நீரூற்றுக்கு செல்லும் வீதியும் மூடப்பட்டுள்ளது.

தற்பொழுதும் அதிகளவான மக்கள் கன்னியா பகுதியை நோக்கி வருகை தந்து வரும் நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து கன்னியா நோக்கி வரும் வாகனங்கள் கடுமையான சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அகத்தியர் அடிகளார் முகத்தில் சுடுநீரை சிங்களவர்கள் ஊற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: