திருகோணமலை – கன்னியா பிரதேசத்திற்கு பஸ்ஸில் வருகைத்தந்த இளைஞர்கள் தமக்கு ஏற்பட்ட பாரிய அசௌகரிய நிலையை எம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இன்று காலை சுமார் 25 பேர் வரையில் கின்னியாவுக்கு சென்ற போது எமது பேருந்தின் இலக்கத்தினை குறித்து வைத்து பேருந்தை இடைநிறுத்தி கடும் சோதனை செய்தனர்.
அவர்கள்தான் தமது பேருந்தின் சில்லை சேதமாக்கியிருக்கக் கூடும் என குறிப்பிட்டுள்ளனர்.
கன்னியாவை நெருங்கிய நிலையில் எம்மை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் நாம் மாற்று வழியில் சென்றோம்.
ஆனால் பெரும்பான்மையினர் சென்ற வாகனத்தை மட்டும் உள்ளே செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
இங்கு வந்த பிறகும் எமக்கு பல தடைகள் ஏற்பட்ட. இதை நாம் அமைதியான முறையில் நடத்துவதற்கே முன்னெடுத்திருந்தோம்.
ஆனால் இதை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது. ஆனால் சிங்களவர்களுக்கு மட்டும் எந்த தடையும் இருக்கவில்லை.
உள்ளே கோயிலில் பூசை நடக்கும போது எம்மை விடாமல் சிங்களவர்களை மட்டும் உள்ளே விடவில்லை.
இந்த இடத்தில் இராணுவம், மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாம் வன்முறையை கையில் எடுக்காத போதும் எம்முடன் வந்தவர்களை வன்முறைக்கு தூண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முகத்தில் தேனீர் ஊற்றியது போக எமது தமிழ் இளைஞர் ஒருவரை சிங்களவர்கள் தாக்கியுள்ளனர்.
இதுவும் நடந்துள்ளது. இன்னும் எமக்கு முடிவு கிடைக்கவில்லை.
அடுத்த நகர்வுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். என குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-https://athirvu.in