மாநில உலா வரும் சுல்தான் இப்ராகிம் மக்களைச் சந்திக்க ஆர்வம்

ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிescortsல் 2019க்கான ஜோகூர் மாநில உலாவை மேற்கொள்ளும்போது மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவார்.

மழையோ வெய்யிலோ 10 மாவட்டங்களில் 700கிமீ பயணம் செய்வதை எதுவும் தடுக்க முடியாது என்றாரவர்.

“மக்களைச் சந்திக்கக் காத்திருக்கிறேன். அவர்கள் குறைகளைச் சொல்ல விரும்பினால், கேட்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

“கடிதம் வழி அவர்கள் மனக்குறைகளைத் தெரிவிக்க விரும்பினால். கடிதங்களை என் அதிகாரிகளிடம் அல்லது என்னுடன் வருவோரிடம் ஒப்படைக்கலாம்”, என இன்று ஜோகூர் பாருவில் சுல்தான் கூறினார்.