தீர்வு கிடைக்கும் என யாராவது தமிழ் தலைவர்கள் கூறுவார்களாக இருந்தால் அது அவர்களின் அரசியல் அறிவு அற்ற தன்மையே; சித்தார்த்தன்

தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என யாராவது தமிழ் தலைவர்கள் கூறுவார்களாக இருந்தால் அது அவர்களின் அரசியல் அறிவு அற்ற தன்மையே என தமிழ் விடுதலைக் கழகத்தின் ( புளொட்) தலைவரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஓன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் செய்த தியாகங்கள் வீண்போக்க் கூடாது. ஏன் மக்கள் தியாகம் செய்தார்களோ. அந்த இலக்கை அடையும் வரை நாம் செயற்பட வேண்டும். கடந்த காலங்களில் செய்த தியாகங்கள் வீண்போக்க் கூடாது. ஏன் மக்கள் தியாகம் செய்தார்களோ. அந்த இலக்கை அடையும் வரை நாம் செயற்பட வேண்டும்.

2009 ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களது பிரச்சனை சதீர்த்து விட்டது என்றோ அல்லது தீர்க்க முடியாது என்றும் இருந்து விட முடியாது.

கல்முனை பிரதேச செயலக விடயத்தில் உறுதி மொழியை பெற்ற பின்னரே நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தோம். ஒமந்தையிலும் புதிய பிரதேச செயலகம் அமைப்பதை தடுத்துள்ளோம். இந்த நிலையை இனி மாற்றினால் ஓன்று செய்ய முடியாது.

இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்க அரசியலமைப்பு சபையை உருவாக்கி நான்கு குழுக்களை உருவாக்கி இருந்தது. அதில் ஒரு குழுவின் தலைவராக நானும் இருந்தேன். இவ் அரசியலமைப்பு வேலைகள் சர்வதேச அழுத்தம் மற்றும் ஐ.நா அழுத்தம் காரணமாக ஏற்படுவதாக பலரும் கருதினார்கள். இன்று அதன் நிலை என்ன? பிரதம மந்திரி அவர்கள் நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்க இன்னும் இரண்டு வருடங்கள் தேவை என தெரிவித்துள்ளார். அப்படியென்றால் இந்த அரசாங்கத்தின் காலத்தில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட மாட்டாது. அடுத்த அரசாங்கமே தீர்க்க வேண்டும் என்கிறார். தமிழ் மக்களுக்கு இனி தீர்வு கிடைக்கும் என யாராவது தமிழ் தலைவர்கள் கூறுவார்களாக இருந்தால் அது அரசியல் அறிவு அற்ற தன்மையே எனத் தெரிவித்தார்.

-tamilcnn.lk

TAGS: