ஷபாஸ்: கிள்ளான் பள்ளத்தாக்கில் 86 விழுக்காட்டினருக்கு நீரளிப்பு நிலைநிறுத்தப்பட்டது

ஷரிகாட் பிக்காலான் ஆயர் சிலாங்கூர்(ஷபாஸ்) கிள்ளான் பள்ளத்தாக்கில் 86 விழுக்காட்டினருக்கு இன்று காலை மணி ஆறிலிருந்து குடிநீர் மீண்டும் கிடைப்பதாகக் கூறிற்று.

கோலா சிலாங்கூர் மற்றும் ஹுலு சிலாங்கூர் பகுதிகளில் நீர் விநியோகம் முழு வழக்க நிலைக்குத் திரும்பி விட்டதாகக் கூறிய அந்நிறுவனம் மற்ற பகுதிகளிலும் நிலைமை விரைவில் சீரடையும் என்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

நீரளிப்பு தடைப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்த ஷபாஸ், சுங்கை சிலாங்கூரில் தூய்மைக்கேடு ஏற்பட்டதால் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டியதாயிற்று என்றும் அதனால் நீர் விநியோகம் தடைப்பட்டது என்றும் கூறிற்று.

இன்னும் தண்ணீர் வந்து சேரா இடங்களுக்கு தண்ணீர் தாங்கிகள் மூலமாக நீர் விநியோகம் செய்யப்படும்.