யாழ்ப்பாணம் கோட்டைப்பகுதியில் இரவு நடந்த சிலை உடைப்பு!

யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்த அந்தோனியார் சிலை உடைக்கப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை வாசல் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இரவு (23) இடம்பெற்றுள்ளது.

வோலயத்தில் இருந்த அந்தோனியார் சிலை தூக்கி வீசப்பட்டு நொருங்கி காணப்படுகிறது.

குறித்த இடத்துக்கு யாழ்ப்பாணம் பொலிஸார் சென்று சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

-athirvu.in

TAGS: