பௌத்த பிக்கு ஒருவர்மீது தமிழர் சுடுநீர் ஊற்றியிருந்தால் இந்த நாட்டில் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருக்க முடியுமா என சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்துக்களின் பிரதம குருவான தென்கயிலை ஆதீனம் மீது பொலிஸார் முன்னிலையிலே சுடுநீர் ஊற்றப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்த சம்பவம் தொடர்பில் எந்த விசாரணையும் இதுவரை இடம்பெறவில்லை.
ஆனால் பௌத்த பிக்கு ஒருவர்மீது தமிழர் சுடுநீர் ஊற்றியிருந்தால் இந்த நாட்டில் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருக்க முடியுமா?
அத்துடன் தமிழர்களுக்கு எந்த அநியாயம் செய்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற இறுமாப்பிலேயே இவ்வாறு செய்கின்றனர்.
தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இவ்வாறு சுடுநீர் ஊற்றியிருப்பீர்களா?
தென்கயிலை ஆதீனம் மீது சுடுநீர் ஊற்றப்பட்டது தொடர்பில் சட்டம் , ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இன்று ஜனாதிபதி வாய் திறக்காதது ஏன்?
அவர் இவ்வாறு சுடுநீர் ஊற்றியதை ஏற்றுக்கொள்கின்றாரா? இந்த சம்பவம் தொடர்பில் சட்டம் ,ஒழுங்கு அமைச்சு எடுத்த நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
-athirvu.in