விடுதலைப்புலி உறுப்பினருக்கெதிராக ஜேர்மனி எடுத்துள்ள நடவடிக்கை!

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பாக ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு எதிராக ஜேர்மனி குற்றச்சாட்டு பதிவுசெய்துள்ளது.

2002 முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறையில் கடைமையாற்றியுள்ளதுடன், லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்கான தவல்களை வழங்கியதாகத் தெரிவித்தே ஜேர்மனி அவருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டை பதிவுசெய்துள்ளது.

கடந்த ஜனவரியில் கைதுசெய்யப்பட்ட ஜி. நவனீதன் வயது 40 என்பவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர் 2005 ஓகஸ்ட் 13ஆம் திகதி, கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: