இராமசாமி தொலைபேசியில் அழைத்துக் கேட்டிருக்கலாமே- வேதமூர்த்தி

பினாங்கு துணை முதல்வர் II பி.இராமசாமி இந்திய சமூகத்துக்கான நிதியளிப்பு தொடர்பில் பொதுவில் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்காமல் தொலைபேசியை எடுத்து நேரடியாக தன்னை அழைத்துக் கேட்டிருக்கலாமே என்கிறார் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி.

பிறை சட்டமன்ற உறுப்பினருமான இராமசாமி, 2019 பட்ஜெட்டில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரிம100 மில்லியன் என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பியிருப்பதற்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அந்த நிதி   யார்  யாருக்கு    எவ்வாறு   பகிந்தளிக்கப்பட்டது என்ற தகவல் மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு (மித்ரா) இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

“யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடும் ஒரு பிரிவு நாங்கள்தான் என்று நினைக்கிறேன்…..மற்ற அமைச்சுகளில் இதை நீங்கள் காண முடியாது.

“இருவரும் ஒரே அரசாங்கத்தில்தான் இருக்கிறோம். அவர் தொலைபேசியை எடுத்து என்னுடன் நேரடியாகப் பேசி இருக்கலாமே”, என்று வேதமூர்த்தி கூறினார்.