விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் காலத்தில் மக்களுக்கு இந்நிலை இல்லை; மஹிந்த!

நாட்டில் மத அனுஷ்டானங்களில் ஈடுப்படவும் முக்கிய பண்டிகைகளைக் கொண்டாடவும் முடியாத அச்ச நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலை பிரகாகரனின் காலத்தில் கூட இருந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் கீழ் புதிய அரசியல் கட்சிகள் இணைந்து அமைக்கும் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற குறித்த கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அரசியல் தலைவர்களின் அதிகார போட்டித்தன்மையினால் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. இதன் தாக்கத்தை நாட்டு மக்களே இன்று எதிர்கொண்டுள்ளார்கள்.

மத அனுஷ்டானங்களில் ஈடுப்படவும் முக்கிய பண்டிகைகளை கொண்டாடவும் முடியாத அச்ச நிலை தற்போது காணப்படுகின்றது. பிரபாகரனின் காலத்தில் கூட நாட்டு மக்கள் இவ்வாறான நிலைமைக்கு தள்ளப்படவில்லை. என மஹிந்த தெரிவித்துள்ளார்.

-https://athirvu.in

TAGS: