திருந்தாத ஸ்ரீலங்கா அரசு: விடுதலைப்புலிகளுக்கு இன்னும் நடுங்குகிறது; அப்படித்தான் கட்டுநாயக்கவில் நடந்த சம்பவம் உணர்த்துகிறது!

இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட பட்டியலில் பெயர் இருந்தும் தனது குடும்பத்துடன் சென்ற கவிராஜ் சண்முகநாதன் என்பவரை இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பலமணி நேர விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் நாடு கடத்தி உள்ளது இலங்கை அரசு .

பிரித்தானியாவில் இயங்கும் தமிழர் அமைப்புகள் சிலவற்றில் இணைந்து செயற்படட கவிராஜ் சண்முகநாதனின் பெயர் இலங்கை அரசின் பயணத் தடை பட்டியலில் உள்ளதாகவும், அவரது குடுப்பத்தினரை விமான நிலையத்தில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள போதும், அவரை விசாரணையின் பின்னர் கைது செய்ய முஸ்தீபுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்நிலையில், சில பிரித்தானிய தமிழர்களின் முயற்சியை அடுத்து, கவிராஜ் சண்முகநாதன் இலங்கை வர புறப்பட்ட சென்னை மீனப்பாக்க விமான நிலையத்திற்கு நாடு கடத்தப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் செய்தி எழுத்தப்படும் வரை, அவர் சென்னையை அடையவில்லை. இதன் பிறகே இந்திய அரசு ஏதும் நவடிக்கை எடுக்குமா இல்லையா என்பது தெரியவரும்.

-https://athirvu.in

TAGS: