தமிழரின் இரத்தம் குடித்த ஓநாய்களெல்லாம் கூட்டமைப்பை விமர்சிக்க என்ன தகுதியுண்டு? – நாடாளுமன்றில் சிறிதரன்

“தமிழ் மக்களின் இரத்தம் குடித்த ஓநாய்களெல்லாம் இன்று வடக்குக்கு வந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிக்கின்றனர். கூட்டமைப்பை விமர்சிக்க அவர்களுக்கு என்ன தகுதியுண்டு? என்னதான் வேஷம் போட்டாலும் தமிழ் மக்களின் கண்ணீர் அவர்களைச் சும்மாவிடாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அவசரகாலச் சட்டம் இனியும் தேவையில்லை. எனவே, அந்தச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிக்கும் யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராகவே வாக்களிக்கும்” – என்றார்.

-https://tamilcnn.lk

TAGS: