யாழ் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தி; என்ன தெரியுமா?

பலாலி விமான நிலையத்தில் இருந்து, இந்திய துணைக் கண்டத்துக்கான பிராந்திய விமான சேவைகளை வரும் செப்ரெம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

‘ சுமார் 70 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்களைத் தரையிறக்கும் வகையில், பலாலி விமான நிலைய ஓடுபாதை தரமுயர்த்தப்படும்.

இங்கிருந்து முதலாவது விமானம் செப்ரெம்பர் மாதம் சேவையை ஆரம்பிக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளோம்.

தென்னிந்தியாவில் சென்னை போன்ற இடங்களுக்கான விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்காக நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்தை சுமார் 110 மில்லியன் டொலர் செலவில் தரமுயர்த்தும் பணிகள் கடந்த மாத தொடக்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-https://athirvu.in

TAGS: