புதிய அரசியலமைப்பு கிடப்பில் போடப்பட்டமைக்கு மகாநாயக்க தேரர்களே காரணம்: மாவை சேனாதிராஜா

புதிய அரசியலமைப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளமைக்கு மகாநாயக்க தேரர்களின் தலையீடே காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டில் இரண்டு தேசியக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கியது. இந்த அரசின் ஊடாக பல வேலைத்திட்ட்ங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த அரசில் அங்கம் வகித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த தரப்புடனும் கலந்தாலோசிக்காது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை திருட்டுத் தனமாக பிரதமராக்கினார். அரசியல் சூழ்ச்சியை மேற்கொண்டார். இதனால் பல வேலைத்திட்ட்ங்கள் தடைப்பட்டன. அதிலும் முக்கியமாக இனப்பிரச்சனைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பு பின்னோக்கி நகர்ந்தது. அதுமட்டுமல்லாது மகாநாயக்க தேரர்கள் புதிய அரசியலமைப்புக்கு முழுக்க முழுக்க தடையாக இருந்தனர். இதனாலேயே அரசியலமைப்பு உருவாவதில் பின்னடைவு ஏற்பட்டது.” என்றுள்ளார்.

-http://4tamilmedia.com

TAGS: