யாழில் கிறிஸ்தவ மத போதனை; கொதித்தெழுந்த மக்கள்!

யாழில் பொன்னாலை – மூளாய் எல்லையில், குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட இந்திய வீடு ஒன்றை விலைக்கு வாங்கிய கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் அங்கு கிறிஸ்தவ மத போதனை நடத்திவருகின்றார்.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

குடியிருப்பதற்கு எனக்கூறி அந்த வீட்டினை வாங்கிய கிறிஸ்தவ சபையின் போதகர் அந்த வீட்டிற்கு முன்பாக பெரும் கூடாரம் ஒன்றை அமைத்துள்ளார்.

அங்கு கிறிஸ்தவ மத போதனைகள் இடம்பெற்று வருகின்றன.

இங்கு தூண்கள் எழுப்பப்பட்டு கூடாரம் அமைப்பதற்கு பிரதேச சபையில் எந்தவித அனுமதியும் பெறப்பட்டிருக்கவில்லை.

இது குறித்து அப்பகுதி மக்கள் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற கிராம சேவையாளர் குறித்த மத போதகருடன் கலந்துரையாடினார். இந்த விடயத்தை தான் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டுசெல்வேன் என அவர் கூறினார்.

இவ்வாவாறான செயற்பாடுகளை தாங்கள் முற்றுமுழுதாக எதிர்ப்பதாகக் கூறியுள்ள அப்பகுதி மக்கள், இந்த விடயத்தில் அதிகாரிகள் அதிக சிரத்தை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-https://athirvu.in

TAGS: