பௌத்தம் முதன்மையானது ஒருபோதும் ஏற்கோம்! – மாவை

பெளத்­த­மதம் முதன்­மை­யா­னது என்­பதை நாங்கள் ஒரு­போதும் ஏற்­க­மாட்டோம் எனத் தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராசா இந்­தியா, இலங்­கையில் உள்ள இந்து மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அடக்கு முறையை தடுத்து நிறுத்தி மதங்­க­ளுக்­கி­டை­யி­லான சமத்­து­வத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த வேண்டும் எனத் தெரி­வித்தார்

இந்து அமைப்­பு­களின் ஒன்­றி­யத்தின் ஏற்­பாட்டில் நல்லை ஆதின முன்­றலில் இடம்­பெற்ற போராட்­டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரி­விக்­கையில்,

பெத்­த­மத ஆதிக்­கத்­தினால் இது பெளத்த நாடு என்று கூறிக்­கொண்டு எங்கள் மீது மிகப்­பெ­ரிய அடக்­கு­முறை  மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.  பெளத்­த­மதம் முதன்­மை­யா­னது என்றும் அதனை  அனை­வரும் எற்­றுக்­கொள்­ள­வேண்டும் என்றும் கருத்­துக்கள் பரப்­பப்­ப­டு­கின்­றன.  இதனை நாங்கள் ஒரு­போதும் ஏற்­க­மாட்டோம்.  இந்து ஆல­யங்கள் போர்க்­கா­லத்­திலும் சரி அதற்கு பின்­னரும் சரி அளிக்­கப்­பட்ட வர­லா­றுகள் இருக்­கின்­றன இதே­போ­லத்தான் தற்­போது மத நல்­லி­ணக்­கத்­திற்கு பாதகம் ஏற்­பட்டு வரு­கி­றது

இந்­தி­யாவில் நூற்­றுக்­க­ணக்­கான மதங்கள், இனங்கள், பிராந்­தி­யங்கள் இருக்­கின்­ற­போதும் அங்கு இந்து மதத்­தினர் பெரும்­பா­லாக இருந்த போதிலும் கூட அந்த நாடு மதச்­சார்­பற்ற நாடாக அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனால் இந்த நாட்டில் பௌத்த மக்கள் பெரும்­பான்­மை­யாக  உள்­ள­தனால் பெளத்த மதத்தை அனை­வரும் ஏற்றுக் கொள்­ள­வேண்டும்.  அது தான் முதன்மை மதம் அரச மதம் எனக் கூறு­வதை நாங்கள் ஏற்­க­மாட்டோம். மதங்கள் சமத்­து­வ­மாக இருக்­க­வேண்டும் மத நம்­பிக்­கை­யுள்­ள­வர்கள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் ஆலயங்கள் பாதுகாக்கப்படவேண்டும்

மக்களின் விடுதலைக்காகவும் மதங்களின் சமத்துவத்திற்காகவும் தொடந்தும் நாங்கள் பாடுபடுவோம்.  இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

-https://tamilcnn.lk

TAGS: