முல்லைத்தீவில் நேற்றிரவு பெரும் பதற்றம்; தமிழர்களை நோக்கி இராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கிபிரயோகம்; பலர் காயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் கிராம அலுவலர் பிரிவில் அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில் இன்றுமாலை டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் மீது இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டதுடன் மூர்க்கத்தனமான தாக்குதலையும் நடத்தியுள்ளனர்

குறித்த பகுதியில் மணல் ஏற்றியவர்கள் மீது அங்கு சென்ற 4 இராணுவத்தினர் தாக்க முற்பட்ட வேளையில் அங்கு மணல் ஏற்றிய மூன்று பேர் தப்பியோட முயற்சித்துள்ளனர் இந்நிலையில் வாகன சாரதியை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். தெய்வாதீனமாக துப்பாக்கி ரவைகள் அவர்மீது படவில்லை ஏனையவர்கள் தப்பிச் செல்ல வாகன சாரதியை சிறைப் பிடித்த ராணுவத்தினர் அவருடைய முகத்தில் கடுமையாகத் தாக்கியதோடு முதுகுப் பக்கத்தில் ராணுவ துப்பாக்கியால் அடித்து காயப்படுத்தியுள்ளனர்

துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சத்தத்தை கேட்ட மக்கள் குறித்த பகுதியில் ஒன்றுகூடி அந்த இடத்தில் இராணுவத்தினர் பொலிஸார் ஆகியோரை அழைத்து தாக்குதல் நடத்திய ராணுவத்தினர் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் அவர்களை அந்த இடத்துக்கு கொண்டு வருமாறு கூறி மக்கள் தொடர்ச்சியாக அந்த இடத்தில் நின்ற போதும் அவர்களை அந்த இடத்துக்கு ராணுவத்தினர் கொண்டு வர மறுத்ததோடு பொலிசாரும் அவர்களை கைது செய்ய மறுத்திருந்தனர்

இந்நிலையில் காயமடைந்தவர்1990 அவசர நோயாளர் காவு வண்டி ஊடாக மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார் இந்நிலையில் குறித்த இடத்தில் தாக்குதல் நடத்திய இராணுவத்தினரை கைது செய்யுமாறு கோரிய போதும் பொலிசார் இதுவரை கைது செய்யாத நிலையில் தற்போது குறித்த பகுதியை சேர்ந்த மக்கள் மாங்குளம் பொலிஸ் நிலைய வாசலில் வந்து அவரை கைது செய்யும் வரை அந்த இடத்திலிருந்து அகல மாட்டோம் எனக்கூறி அந்த இடத்தில் தற்போது இருக்கின்றனர்

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வந்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான மு முகுந்தகஜன் இ சத்தியசீலன் ஆகியோரும் வருகைதந்து மக்களுடன் தற்போது(12.21) பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இருக்கின்றனர்.

-https://athirvu.in

TAGS: