எமது போராட்டத்தின் தன்மையை சிங்கள மக்களுக்கு தெளிவு படுத்த தவறியுள்ளோம்- எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 36 ஆயுத குழுக்கள் இருந்த போது இருந்த ஒற்றுமையை விட கூடுதலாக இருக்கிறது. விடுதலைப்புலிகளின் போராட தடை விதித்த 30 சர்வதேச நாடுகள் தான் இன்று எமக்கு ஆதரவு போல் நடிக்கிறார்கள்.எமது போராட்டத்தின் தன்மையை சிங்கள மக்களுக்கு தெளிவு படுத்த தவறியுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி நகரில் திங்கட்கிழமை (12) காலை 9 மணியளவில் இராசமாணிக்கம் மண்டபத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தலைமையில் இடம்பெற்றவேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 36 ஆயுத குழுக்கள் இருந்த போது இருந்த ஒற்றுமையை விட கூடுதலாக இருக்கிறது. விடுதலைப்புலிகளின் போராட தடை விதித்த 30 சர்வதேச நாடுகள்தான் இன்று எமக்கு ஆதரவு போல் நடிக்கிறார்கள்.எமது போராட்டத்தின் தன்மையை சிங்கள மக்களுக்கு தெளிவு படுத்த தவறியுள்ளோம் என்பது நிதர்சனமான உண்மை.முறையான அதிகார பகிர்வுக்கு நாங்கள் ஆதரவு தருவோம் என முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எமக்கு வழங்கிய வாக்குறுதியின் பின்னர் மகிந்த தரப்பிற்கு இந்தியா கொடுத்த அழுத்ததின் காரணமாகத்தான் 18 சுற்று பேச்சுக்கள் இடம்பெற்றது.
நாட்டின் அனைத்து விடயங்களில் தான்தோன்றி தனமாக செயற்பட்டு 18 அரசியலமைப்பை இயற்றி செய்யப்பட்டதன் விளைவுதான் சிங்கள மக்களும் கிளர்ந்தனர். இதன்மூலமாக சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்களையும் கூட்டித்தான் நல்லாட்சியை கொண்டுவந்தோம் இதில் மிகப்பெரிய பங்கு எமக்குரியது.சனாதிபதிக்கு அரசியல் அதிகாரங்கள் இல்லை அரசியல் போக்கிரித்தனம் அதிகரித்துவிட்டது.அரசுகள் தடம்புரளும்போது தூக்கி நிறுத்தியவர்கள் நாங்கள். 2176 வழக்குகள் நில விடுதலைக்கான வழக்குகளை 2003ம் ஆண்டு தொடக்கம் 2013 தொடுக்கப்பட்டுள்ளன.வெளிநாட்டு நிறுவனத்திற்கு  99 வருடத்திற்கு மஹிந்த காலத்தில்  மக்களின்  காணியை குத்தகைக்கு கொடுத்த போது அதன் பின்னர் அந்த காணியை மீண்டும்  நீங்கள் பெற்றுத்தந்த காணிக்கு நன்றியாக இன்றுவரை மரக்கறி கொழும்பிற்கு அனுப்புகின்றனர். ஒக்டோபர் புரட்சியை நாங்கள் வென்றிருக்காவிட்டால் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்திருப்பார். நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்ற நாங்கள் நீதிமன்றம் செல்லவில்லை . பிரதமர் ரணிலுக்கும் நீதிமன்றம் செல்ல திராணி இருக்கவில்லை அதனால்தான் ஹபீர் காசிம் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் முறைப்பாட்டாரள்களாக வந்தார்கள் என தெரிவித்தார்.இதன்போது பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களிடம் பல கேள்விகளை தொடுத்தனர்.நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்  மகுட உரையாற்றினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஷ்ணன்பிள்ளை துரைராஜசிங்கம்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை  மட்டு மாநகர்  முதல்வர் சரவணபவன்  பிரதேசசபை தவிசாளர்கள்  பிரதேசசபை உறுப்பினர்கள் மகளீர் அணியினர். இளைஞ்ரணியினர் என பலர் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
-tamilcnn.lk
TAGS: