அவுஸ்திரேலியா செல்ல தயாரான 12 பேர் சிலாபத்தில் கைது

அவுஸ்திரேலியாவுக்கு படகுமூலம் சட்டவிரோதமான முறையில்  செல்ல தயாரான 12 பேர், சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இரணவில பகுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை, வெலிகந்த, கல்குடா மற்றும் தொடுவாய் ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்றைய தினம் சிலாபம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

-tamilmirror.lk

TAGS: