நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, அரசாங்கத்தினால் இதுவரை இயலாமல் போயுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான, ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை மூலோபாய ரீதியான திட்டமொன்று வகுக்கப்பட்டு செயற்பாடு இடம்பெறுவதை தான் காணவில்லை என்று பொன்சேகா கூறியுள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய ஆயிரம் பேரளவில் 17 முகாம்களில பயிற்சி பெற்றிருந்தனர்.
130 பேரளவில் காவல்துறையினரிடம் பெயர்ப்பட்டியல் ஒன்று இருந்தது.
அந்தப் பட்டியிலில் உள்ளவர்களில் இதுவரை 60இற்கும் குறைவானவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, பிரச்சினை முடிவடையவில்லை என்பது சிறுவர்களுக்கும் தெரியும்.
பொறுப்புவாய்ந்தவர்களுக்கு தீர்மானம் மேற்கொள்வதற்கான தகைமை இல்லை என்பதே தனக்கு தெரிவதாகவும் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
-athirvu.in