யாழ்ப்பாணம் கடற்பகுதியில் பாரியளவிலான வெடிபொருட்கள்;அதிர்ந்துபோன சிங்கள அரசு!

கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து யாழ்ப்பாணம், ஆழியவளை கடல் பகுதியில் மேற்கொண்ட நீர்முழ்கி நடவடிக்கையின் போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கு இடமான பொதி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பொதியில் 15 கிலோ கிராம் வெடிபொருட்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

பின்னர் குறித்த பொதி மேலதிக விசாரணைக்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

-athirvu.in

TAGS: