ஈழத்தமிழருக்கு துரோகம் செய்த விஜய் சேதுபதி?; கொதித்தெழுந்த தமிழர்கள்!

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கப்போவதாக தென்னிந்திய பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கப்போவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்திருந்திருந்த நிலையில் ஈழத்தமிழருக்கெதிரான கருத்துக்களை முன்வைத்த முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க கூடாது என தென்னிந்தியாவில் இயங்கிவரும் ஈழத்தமிழர்கள் சார்பான அமைப்புக்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் விஜய் சேதுபதியிடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.

அப்போது இவர்களின் கோரிக்கையை ஏற்று தான் இந்த வாழ்க்கை வரலாறு படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுவதாக தென்னிந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன, அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் எங்கள் உணர்வுகளை புரிந்துகொண்டமைக்கு நன்றிகள் என பலர் விஜய் சேதுபதிக்கு நன்றிகளை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் அவுஸ்திரேலியாவிற்கு நிகழ்வொன்றிற்காக சென்ற விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கப்போவதாக மீண்டும் அறிவித்திருகின்றார்.

இந்த அறிவிப்பு தமிழக மக்கள், தமிழகத்தில் இயங்கும் ஈழ ஆதரவு அமைப்புக்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன், அவருக்கெதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் விஜய் சேதுபதி முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் மீண்டும் நடிப்பதாக அறிவித்ததற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழகத்திலுள்ள முக்கியமான அரசியல் தலைவரொருவர் நான் இருக்கிறேன் இந்த திரைப்படத்தில் நீங்கள் நடியுங்கள் இதனால் வரும் பிரட்ச்சனை எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என தைரியம் கொடுத்த காரணத்தினால்தான் விஜய் சேதுபதி தற்போது அந்த திரைப்படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.

-athirvu.in

TAGS: