அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ குறித்து அனைவரும் விவாதித்து வரும் சூழலில், தங்களது நிலத்தைக் காக்க, சயீர் பொல்சனாரூ அரசுக்கு எதிராக எதிரிகளாக இருந்த பழங்குடிகள் ஒன்றிணைந்துள்ளனர்.
கயாபோ இனக்குழுவும், பனரா இனக்குழுவும் கடந்த பல தசாப்தங்களாக சண்டையிட்டு வருகின்றனர். 1968 ஆம் ஆண்டு கயாபோ இனக்குழு துப்பாக்கிகளுடன் வந்து பனரா இனக்குழுவைத் தாக்கியதில் 26 பனரா பழங்குடிகள் பலியாகினர். பிபிசி பிரேசில் சேவையிடம் பேசிய ஒன்றிணைந்த இந்த இருதரப்பு பழங்குடிகளும், “இப்போது எங்களுக்கு எதிராக எந்த பிணக்கும் இல்லை. எங்களது ஒரே எதிரி எங்களது நிலத்தை அபகரிக்கப் பார்க்கும் சயீர் பொல்சனாரூ தலைமையிலான பிரேசில் அரசுதான் எனக் குறிப்பிட்டுள்ளனர்.” -BBC_Tamil