பலாலி விமான நிலையம், யாழ். விமான நிலையமாக பெயர் மாற்றம்!

யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தின் பெயரை ‘யாழ். விமான நிலையம் (JAF)’ என்று பெயரிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்வொன்றுக்காக அண்மையில் இலங்கை வந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர் கனிமொழிக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் இலங்கை அக்கறை கொண்டிருப்பதாகவும், இதன் போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் பங்கேற்ற பிரதமர் செயலக அதிகாரி சுதர்சன குணவர்த்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

2011ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும், போதிய வரவேற்பு இல்லாமையால் அது நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-4tamilmedia.com

TAGS: