மண்டபம் அகதிகள் முகாமில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த முன்னால் விடுதலைப்புலி உறுப்பினர் தனது குடும்பத்தினருடன் மாயமான நிலையில் அவர் கனடா நாட்டில் வசிப்பது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்களை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தனுஷ்கோடிக்கு 2014 மே மாதம் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த தம்பதியினர் தங்களது 3 பெண் குழந்தைகளுடன் தமிழகம் வந்தனர்.
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் பல்வேறு மருத்துவமனைகளில் கிசிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 4 குழந்தைகளுடன் முகாமில் இருந்த அவர்கள் மே 20 ல் முகாமைவிட்டு வெளியேறி ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் வசித்தனர்.
இவர்கள் முகாமிற்கு திரும்பாததால் ஓம்சக்தி நகரில் பார்த்த போது குடும்பத்தினருடன் ஜூன் 8 ல் மாயமானது தெரிய வந்தது.
இது குறித்து அகதிகள் முகாம் தனித்துணை தாசில்தார் ரவி மண்டபம் பொலிஸில் ஜூன் 20 இல் புகார் செய்தார்.
பொலிஸார் விசாரணையில்இவர்கள் தமது 4 குழந்தைகளுடன் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு தப்பியிருக்கலாம் என தெரிய வந்தது.
தொடர்ந்து பொலிஸார் விசாரணையில் கனடாவிலிருந்து தமிழகத்தில் சிலருடன் அலைபேசியில் தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவர்களை தமிழகம் கொண்டு வர கனடா நாட்டின் உதவியுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இலங்கை அரசும் இவர்களை தேடி வருவதால் அவர்களும் கனடா நாட்டில் இருந்து இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-athirvu.in