நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் கடும் பதற்றம் -நீதிமன்ற உத்தரவை மீறி ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் கடும் அட்டகாசம்!

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆலய வளாகத்துக்கு அண்மையில் பௌத்தமத குருவின் உடலை புதைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து குடிகொண்டிருந்த பௌத்த மதகுரு உயிரிழந்த நிலையில் அவரது உடலை புதைப்பது தொடர்பான பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி இருந்தது

இந்நிலையில் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெருமளவான பொலிசார் கொண்டுவரப்பட்டு கலகம் அடக்கும் பொலிசார் உட்பட குறித்த வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விகாரையின் விகாராதிபதி உடலை ஆலய வளாகத்திற்கு அருகிலேயே புதைப்பதற்காக ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதிகளை சென்று பார்வையிடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

-athirvu.in

TAGS: